பெண் போலீஸ் ஒருவர் மாணவி போல் சென்று ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி மானிய குழுவின் உதவி எண்ணிற்கு கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகிங் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பெண் போலீஸ் ஒருவரை மாணவி போல் அனுப்பி வைத்துள்ளனர். அவரும் மாணவர்களுடன் பேசி, பழகி குற்றம் செய்த அனைவரின் விவரங்களையும் திரட்டியுள்ளார்.
மேலும் அவருக்கு உதவியாக ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், 2 தலைமை காவலர்கள் உணவு ஊழியர்கள் போலவும் சென்றனர். பின்னர் அந்த மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 11 பேரும் 3 மாதங்களுக்கு கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.