தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என ஸ்டாலினால் அடித்துக் கூற முடியுமா..? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” அனைவரது வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன குழந்தையை பறிகொடுத்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். கட்டாய மதமாற்றத்தால் ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பற்றி இதுவரை நாட்டின் முதல்வர் வாய் திறக்கவில்லை.
எல்லாவற்றிற்கும் குரல் கொடுப்பார் தொல் திருமாவளவன் இப்போ எங்கே போனார் ஆளையே காணோம்..? மாணவி தனக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சல் மற்றும் திணிக்கப்பட்ட வேற்று மத கருத்துக்கள் தான் தனது தற்கொலைக்கு காரணம் என பேட்டி கொடுத்துள்ளார். அந்த குழந்தையின் மரண வாக்குமூலம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா.?? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது ஆணித்தரமாக அடித்துக் கூற முடியுமா.? முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் என்று. அந்தப் பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைத்தாக வேண்டும்.!” இவ்வாறு அவர் கூறினார்.