புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற உள்ளதாக சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரவோடு இரவாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆலங்குடியில் போராட்டம் நடைபெற உள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்துள்ளது. இதை ஆய்வுசெய்த சைபர் க்ரைம் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 பேரை கைது செய்துள்ளனர்.
Categories