கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா, விடுதி கட்டடங்களுக்கு அனுமதி உண்டா,தீ தடுப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கின்றனவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய சிஇஓ-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் Residential பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.நேற்று தமிழக முழுவதும் ஆசிரியர்கள் பள்ளியில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.