Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி மரணம்… வன்முறை… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு கிளப்பியது. அதனால் போராட்டங்களும் வெடித்தன. அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அங்கிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் வன்முறையால் சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வியை தொடர வைப்பது பற்றி ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்தப் பள்ளியின் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் பாடம் நடத்தவும் மாணவர்களின் சான்றிதழ்களை பெற விரைவில் சிறப்பு முகாம் நடத்தவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Categories

Tech |