கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாணவியின் உடல் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கையை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் பள்ளியின் தாளாளர்கள் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாணவி இறப்பதற்கு முந்தைய நாள் இரவு 8.07 மணிக்கு எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் சோர்வாக வகுப்பறைக்கு வரும் ஸ்ரீமதி மயக்கமடைந்து மேஜையில் படுத்துக்கொள்கிறார். இதையடுத்து மாணவி மரணம் தொடர்பாக புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
https://twitter.com/Harish90808882/status/1549765992598843393