Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்….. 7 பேர் குற்றவாளிகள்….. தந்தை பரபரப்பு….!!!!!

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக பெரிய நெசலூர் கிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீமதியின் உடலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள், உறவினர்கள் ஆகியோர் மட்டுமே அஞ்சலி செலுத்தினர்.

முக்கியசாலையில் இருந்து பெரியநெசலூர் கிராமம் வரை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவியின் உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி, இறுதி ஊர்வல வாகனத்தில் அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.  பின்னர் அவரின் உடல் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு அவரது தந்தை ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர் அவரது மனைவி மகன்கள் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் என மொத்தம் ஏழு பேர் நான் குற்றவாளிகள் என் மகளை நான் புதைக்கவில்லை விதைத்திருக்கிறேன். அந்த விதை மரமாக மாறி கொலையாளிகளின் குடும்பத்தை வேர்ரருக்காமல் விடாது. என் மகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |