Categories
அரசியல்

“மாணவி லாவண்யா தற்கொலை!”…. காரணமானவங்கள கூண்டுல ஏத்துங்க!…. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா விடுதி வார்டன் துன்புறுத்தியதால் விஷ மருந்து குடித்து உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி மிகுந்த வேதனையை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலியையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு கல்லூரி, பள்ளிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் துணிவுடன் பெற்றோர்களிடம் அந்த பிரச்சனையை எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்வது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.

எனவே இனி மாணவ, மாணவியர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |