Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி ஸ்ரீமதி வழக்கு…. கைதான 173 பேர்…. “மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு”….!!!!!

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 173 பேரின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 322 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 173 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 15 நாட்களுக்கு 173 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |