கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சிறப்பு வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 5:30 மணிக்கு மாணவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.
இதையடுத்து பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும் என்றும், மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது ஆசிரியைகள் அவர்களுடன் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மாணவ மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.