Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகள்…. போலீஸ் சூப்பிரண்டின் திடீர் அறிவிப்பு….!!!

சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 350 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேசினார். அவர் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக 35,000 சிறுவர்-சிறுமிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார். அதன்பிறகு சிறுவர்-சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இதனையடுத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுடன் நெருங்கி பழகி அன்பை பரிமாற வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து பள்ளிகளிலும் சிறுவர் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால், உடனடியாக தலைமை ஆசிரியர்கள் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றால், ஆரம்பகால கட்டத்திலேயே நடவடிக்கை எடுத்து சிறுவர்-சிறுமிகளுக்கு உதவ முடியும் என்றார். மேலும் சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு சிறந்த வழிகாட்டு தல்களை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

Categories

Tech |