மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி வானர பேட்டை பகுதியிலுள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, புதுச்சேரி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பது தடுப்பூசி மட்டுமே ஆகும். ஆகவே அனைவரும் அதை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.