பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்தாவது: “பல பாடல்களைப் பாடி துன்பமானாலும், துள்ளலானாலும் தனது குரல் வளத்தால் ரசிகர்களுக்கு விருந்து அளித்தவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த மாணிக்கம் “என்ற புகழாரம் தெரிவித்துள்ளார்.