வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயலால் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.