மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சென்ற 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் அதிகமான வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசானது சரியாக மேற்கொள்ளாததால், வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.