மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூபாய்.700 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது முதற்கட்ட கணக்கீடே ஆகும்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறியதாவது, ஓரிரு நாட்களில் மொத்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது வரையிலும் 400 மரங்கள் விழுந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.