மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கனமழை பெய்வதால் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக இன்று பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நடக்க இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வரும் 16ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.