கடற்கரை – வேளச்சேரி இடையே மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் பின் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து வட உள் தமிழக மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலால் சேதுமடைந்த பகுதிகளை கண்டறிய பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்பட உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் முழுவதும் முழு வீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ரயில் நிலையங்களில் சேதமான மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.