தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கிய நிலையில் தற்போது முதல் புயல் உருவாக்கப் போகிறது. வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைந்து வங்கக்கடலை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற 8-ம் தேதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வரக்கூடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டால் அந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்படும்.
இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்கள், டிசம்பர் 9-ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 8-ம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்பதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். எனவே அதற்கு தகுந்தார் போன்று பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.