ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Categories