Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… சென்னையில் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமான கழிவு…? மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகபட்ச கழிவு  எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலினால் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் காவல்துறையினரும், துப்புரவு தொழிலாளர்களும் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் துப்புரவு துறை அதிகாரிகள் கூறியதாவது, வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமான கழிவுகளை சென்னை மாநகராட்சியில் அகற்றியதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |