Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது.

சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. அதிகாலை 5: 30 மணி நிலவரப்படி புயல் மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் தேதி) நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  புயல் கரையை கடக்கும்போது நாளை நள்ளிரவு முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடல் சீற்றமாக காணப்படுகிறது. 10 அடிக்கு கடல் அலைகள் எழுகின்றன.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, தெலுங்கானாவின் ராயலசீமா, காரைக்காலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.. புயல் காரணமாக தமிழகம், தெற்கு ஆந்திரா, வட இலங்கை பகுதிகளில் நாளை 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளில் நாளை அதீத கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |