Categories
மாநில செய்திகள்

“மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் செம்ம ஹாப்பி நியூஸ்….!!” PF வட்டி உயர்வு…!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருக்கிறது. அந்த கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதம் குறித்து அறங்காவலர் குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல்வாரத்தில் இந்த கூட்டம் கூட்டப்படும். இதில் வட்டி விகிதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமேயானால் மாத சம்பளம் வாங்குவோருக்கு அது நன்மை பயக்கும்.

ஏற்கனவே வட்டி விகிதம் 8.5 சதவீதமாக உள்ள நிலையில் தற்போது நடைபெறவுள்ள கூட்டத்தில் மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், PF வட்டி உயர்வு தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |