Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் ரூ.3000 கிடைக்கும்….. இந்த திட்டம் பற்றி தெரியுமா…? விவசாயிகளே தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு மற்றொரு பென்ஷன் திட்டமும் பயனுள்ளதாக இருக்கும்.  அதாவது பல்வேறு தரப்பினருக்கு பலவிதமான பென்ஷன் திட்டங்கள் இருந்தாலும் விவசாயிகளுக்கு அந்த திட்டம் உதவும் விதமாக இல்லை. அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

60 வயது முடிந்த பிறகு இந்த திட்டத்தில் பென்ஷன் பணம் வந்து சேரும். இந்த திட்டத்தை பொருத்தவரை 18 வயதாக இருக்கும் போது இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். 30 வயதில் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறாக இந்த திட்டத்தில் இணையும் வயதை பொறுத்து பிரீமியம் இருக்கும். இதற்கு ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டா போன்றவை தேவைப்படும்.

Categories

Tech |