Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் வருமானம் கிடைக்கும்….. இந்த திட்டத்தில் இவ்ளோ நன்மை இருக்கா….? உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையை பென்சனாக வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

வங்கிகளில் நிலையான வைப்பு நிதி திட்டம் இருப்பதுபோல, தபால் நிலையங்களிலும் மாதாந்திர வருமானம் திட்டம் என்ற ஒரு திட்டம் உள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் நல்ல சேமிப்பை தருகின்றது. ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு முன்பாக சேமிப்பு கணக்கை நீங்கள் மூட வேண்டும் என்றால், அதற்கு அபராதம் விதிக்கப்படும். கணக்கு தொடங்கிய முதல் ஆண்டு கணக்கை முடிக்க முடியாது.

இந்தத் திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 4.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இணைப்பு கணக்காக இருந்தால் அதிகபட்சம் 9 லட்சம் வரை சேமிக்கலாம். சிங்கிள் அக்கவுண்ட்டில் நீங்கள் குறைந்தது ரூ.4.5 லட்சம் சேமிக்க முடியும் என்பதால் 6.6 சதவீத வட்டியில் உங்களுக்கு மொத்தம் ரூ.29,700 வட்டி வருமானம் கிடைக்கும். ஒருவேளை ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் அதிகபட்சமாக நீங்கள் சேமித்தால் 6.6 சதவீத வட்டி வருமானத்தில் ரூ.59,400 வருமானம் கிடைக்கும்.

இத்திட்டத்தில் மொத்தம் ரூ.50,000 முதலீடு செய்தாலே உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,300 பென்சன் கிடைக்கும். அதேபோல, ரூ.1 லட்சம் சேமித்தால் மாதத்துக்கு ரூ.550 அல்லது வருடத்துக்கு ரூ.6,600 பென்சன் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்திருந்தால் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,475 பென்சன் வரும்.

மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று இந்த சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். அடையாள ஆவணம், முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்றவை தேவைப்படும். 1,000 ரூபாய் செலுத்தி நீங்கள் கணக்கைத் திறக்க முடியும்.

Categories

Tech |