சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான கோசிக் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கோசிக் ராமை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சிலர் ஹைதராபாத்தை தலையிட தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். அதில் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவி தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதனை அடுத்து முன்பணமாக 5 லட்ச ரூபாய் கொடுத்தால் லேப்டாப் மற்றும் பல்வேறு மின் சாதன பொருட்கள் அனுப்பி வைப்போம் என ஆன்லைனில் தெரிவித்துள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய கோசிக் ராம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனை அடுத்து அந்த கம்பெனி போலியானது என்பதை அறிந்த கோசிக் ராம் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.