Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 முதலீடு – ரூ.9 லட்சம் ரிட்டன்…. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் தெரியுமா?…..!!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதாந்திர வருமான திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு நீங்கள் உத்தரவாதமான மாத வருமானத்தை ஒவ்வொரு மாதமும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு என இரண்டையும் திறந்து கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் கணக்கு தொடங்கலாம் எனவும் ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

அதேசமயம் கூட்டு கணக்கில் முதலீட்டு வரம்பு ஒன்பது லட்சம் மட்டுமே. இதில் 6.6சதவீதம் வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் இதை செலுத்தப்படுகின்றது.இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை,ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.

Categories

Tech |