ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த SBI annuity scheme திட்டத்தின் கீழ் நீங்கள் 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதம் என முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டமானது டேர்ம் டெபாசிட் திட்டத்தைப் போன்றதுதான். இதில் முதலீட்டுக் காலத்தை நீங்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் வந்துகொண்டிருக்கும். இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பயன் பெறலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மாதத்துக்கு ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால் மொத்தம் ரூ.5,07,964 முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது. அதாவது, இத்திட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்வதாக இருந்தால் நல்ல லாபம் பெறலாம். மாதத்துக்கு 1,000 ரூபாய் தொடங்கு சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை இத்திட்டத்தில் சேமித்து வந்தால் எதிர்காலத்தில் நிலையான வருமானம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும்.