இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் பல சிறந்த திட்டங்கள் உள்ளது. அப்படி சிறந்த பென்சன் திட்டம் தான் இந்த ஜீவன் அக்ஷய் பாலிசி. இது ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியில் சிறப்பு என்ன என்றால் பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷன் கேட்டு பெற முடியும். பென்சன் தேவையுள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரை உள்ள அனைவரும் இந்தப் பாலிசி திட்டத்தில் இணைய முடியும். மருத்துவ பரிசோதனை அவசியம் எதுவும் கிடையாது.
இந்திய குடிமக்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஒரு லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டில் இந்த பாலிசியை எடுக்கலாம். பாலிசிதாரருக்கு 10 வகையான பிரிவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. இந்த பாலிசியில் குறிப்பிட்ட தொகையை நிரந்தர முதலீடு செய்த உடனே மாதம்தோறும் 14,000 பென்சன் கிடைக்கும். இந்த ஜீவன் அக்ஷய் பாலிசியில் முதலீடு செய்த உடனே 14,000 பென்ஷன் கிடைக்கவும் வழி உண்டு. அதற்கு, Option ‘A’-வை அதாவது ‘Annuity payable for life at a uniform rate’ என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணம்;
வயது: 36
காப்பீட்டு தொகை: 30,00,000
மொத்த பிரீமியம்: 30,54,000
ஓய்வூதியம் (பென்ஷன்):
வருடாந்திர பென்ஷன்: 1,80,000
அரை ஆண்டு பென்ஷன்: 88,500
காலாண்டு பென்ஷன்: 43,913
மாதாந்திர பென்ஷன் : 14,550
இதன் மூலம் பாலிஸி தாரருக்கு மாதத்திற்கு ரூ.14550 ஓய்வூதியம் கிடைக்கும். பாலிசிதாரர் உயிர்வாழும் வரை இந்த ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.