Categories
Tech டெக்னாலஜி

மாதம் ரூ.167 மட்டுமே…. ஓடிடி பிரீமியம் திட்டமும் இருக்கு…. அதிரடி சலுகை அறிவித்த பிரபல நிறுவனம்….!!!!

நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இணையசேவை வழங்குனரான (ISP) Excitel, தற்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்துக்கு வெறும் 167 ரூபாய்க்கு அளிக்கிறது. இது நிறுவனம் வழங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகை ஆகும். அதன்படி பழைய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை கிடைக்காது. மாதத்துக்கு ரூபாய்.167க்கான இச்சலுகை புது பயனாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அதன்பின் நிறுவனம் வழங்கும் தற்போதைய கட்டணத்தை பயனாளர்கள் தொடரவேண்டும்.

பயனாளர்களுக்கு 300 Mbps திட்டத்தை பெறும் விருப்பம் இருந்து, ஆனால் அந்த வேகம் உங்களுக்குத் தேவைப்படுமா என்பதை அவர்கள் பார்க்க விரும்பினால், அதனை சோதித்துப் பார்க்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும். மகாராஷ்டிரா மும்பையில் வசிக்கும் பயனாளர்களுக்கு Excitel ஒரு புது ஆன்போர்டிங் வரையறுக்கப்பட்ட நேர சலுகையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவற்றில் பயனாளர்கள் மாதம் வெறும் ரூ.167க்கு 300 Mbps பெறமுடியும். பயனாளர்கள் 3 மாதங்களுக்கு இத்திட்டத்தை வாங்க வேண்டும்.

ஆகவே வாடிக்கையாளருக்கான மொத்த செலவு ரூபாய்.167 x 3 = ரூ.501 ஆக இருக்கும். இக்கட்டணத்தில் இறுதி பில்லில் வரிகளும் அடங்கும். அத்துடன் இதில் நிறுவல் கட்டணங்கள் எதுவுமில்லை என்பது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் முக்கிய அம்சமாக உள்ளது. நிறுவனம் ONU சாதனத்துக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு முறை ரீப்ண்ட் செய்யக்கூடிய செக்யூரிட்டி செபாசிட் தொகையாக ரூபாய்.2000ஐ பெறுகிறது.

வாடிக்கையாளர்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதத் திட்டங்களை வாங்கவிரும்பினால், அவர்கள் Excitelன் 300 Mbps திட்டத்தை OTT (ஓவர்-தி-டாப்) பலன்களுடன் ரூபாய். 100/மாதம் + GST ​​என்ற பெயரளவு கட்டணத்தில் தொகுக்கலாம். இவற்றில் ஓடிடி பிரீமியம் திட்டமும் இருக்கிறது. இவை 300 Mbps திட்டத்துடன் இணைக்கப்படலாம். எனினும் அத்திட்டத்திற்கு மாதம் ரூ. 166 + GST ​​செலவு ஆகும். இது நிறுவனத்தின் விளம்பரச் சலுகை என்பதால், எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம்.

Categories

Tech |