இளம் வயதில் ஓடி ஆடி வேலை செய்துவிட்டு கடைசி காலத்தில் தங்களை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று அனைவருமே யோசிப்பார்கள். அதற்கான ஏற்பாட்டை இப்போதிலிருந்தே செய்துகொள்வது நல்லது ஆகும். சம்பாதிக்கும் பணத்தை உடனே செலவு செய்து விடாமல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சேமிக்க தொடங்க வேண்டும். கடைசி காலத்தில் ஏதாவது பென்ஷன் போன்ற ஒரு நிலையான தொகை வந்து கொண்டிருந்தால் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அரசின் ஆதரவோடு செயல்பட்டு வரும் இந்த திட்டத்தில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்குகிறோமோ அதிக அளவில் பலன்கள் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்ச ரூபாய் பென்ஷன் வாங்க முடியு.ம் இருபது வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால் எதிர்காலத்தில் 40 வருடங்களில் மொத்தமாக 1.91 கோடி கிடைக்கும். 18 முதல் 65 வயது வரை எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.