அரசாங்கத்தால் ஜனவரிமாதம் 2004 ஆம் வருடம் துவங்கப்பட்ட என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் லாபகரமானதாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்டுகிறது. இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2009 ஆம் வருடம் முதல் அனைவருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது முதலீட்டாளர்கள் வயதான காலக்கட்டத்தில் சிறந்த வருவாயை பெற்று வளமாக வாழ்வதற்கு வழிவகை புரிகிறது. NPS திட்டத்தில் இந்திய குடி மகன்கள் (அல்லது) இந்தியாவில் வசிப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவற்றில் சேருபவர்களின் வயது 18 -70-க்குள் இருக்க வேண்டும். இந்த நீண்டகால சேமிப்பு திட்டமானது மக்களுக்கு வயதான காலக்கட்டத்தில் நிதி தேவைகளை சமாளித்துக்கொள்ள நிலையான வருமானத்தை வழங்குகிறது.
என்பிஎஸ் திட்டத்தில் முதலீட்டாளர் ஒருவர் 20 வயதில் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1,000 என்ற கணக்கில் முதலீடுசெய்ய துவங்கினால் அவர் ஓய்வுபெறும் வரை அவர் செலுத்திய மொத்ததொகை ரூபாய்.5.4 லட்சமாக இருக்கும். வருடத்திற்கு 10 % வருமானம் கிடைத்தால், மொத்த முதலீடு ரூபாய்.1.05 கோடியாக அதிகரிக்கும். முதலீட்டாளர் 40 % கார்ப்ஸை வருடாந்திரமாக மாற்றினால், அதன் மதிப்பானது ரூபாய்.42.28 லட்சமாக இருக்கும். இதற்கிடையில் வருடாந்திர வீதம் 10% என்றால், மாதம்ஓய்வூதியமானது ரூபாய்.21,140ஆக கிடைக்கும். மேலும் முதலீட்டாளருக்கு சுமார் ரூ.63.41 லட்சம் மொத்தம் ஆக கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் முதலீடுசெய்யும் தொகையானது அதிகரிக்கும்போது ஓய்வூதியமும் அதிகமாக கிடைக்கும்.
மாதம் ரூபாய்.2,500 முதலீடு செய்தால் 65 வயதிற்குப் பின் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் ஓய்வூதியம் ரூபாய்.52,000 ஆக இருக்கும். NPS கால்குலேட்டரை பயன்படுத்தி எவ்வளவு முதலீடுசெய்தால் எவ்வளவு தொகை இறுதியில் கிடைக்கும் என்பதை சரிபார்க்க இயலும். என்பிஎஸ் கால்கு லேட்டரைப் பயன்படுத்த முதலாவதாக https://www.npstrust.org.in/content/pension-calculator என்ற இணையதள பக்கத்திற்கு போகவேண்டும். இவற்றில் உள்ளே நுழைந்த பிறகு உங்களது பிறந்ததேதியை உள்ளிடவும். நீங்கள் மாதம் எவ்வளவு தொகை இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் எந்த வயதில் முதலீடுசெய்ய துவங்கப்போகிறீர்கள் என்ற விபரத்தையும் அதில் உள்ளிடவும். முதலீடு, வருடாந்திர வருவாயில் தாங்கள் எதிர்பார்க்க்கூடிய வருமானத்தினை உள்ளிடவேண்டும். அதன்பின் நீங்கள் மாதாந்திர ஓய்வூதியம், வருடாந்திர மதிப்பு மற்றும் மொத்தத்தொகை போன்றவற்றைப் பார்க்கமுடியும்.