Categories
அரசியல்

மாதம் ரூ. 2,500 பென்ஷன்…. தபால் துறையில் சிறந்த சேமிப்பு திட்டம்…. ஜாயின் பண்ணி பாருங்க…!!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டியிலிருந்து கல்வி கட்டணத்தை செலுத்த முடியும்.

எந்த ஒரு தபால் நிலையத்திற்கு சென்றோம் தபால் அலுவலக கணக்கு திறக்கலாம். அதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்ய முடியும். தற்போது இந்த திட்டத்தின்கீழ் வட்டி 6.6 சதவீதமாக உள்ளது. அதன்படி குழந்தையின் வயது 10 வயதுக்கு மேல் இருந்தால் இந்த கணக்கினை அவர்களின் பெயரில் திறந்து கொள்ளலாம். அதற்கு குறைவாக இருந்தால் பெற்றோரின் பெயரில் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். மேலும் உங்கள் குழந்தையின் வயது 10 என்றால் நீங்கள் அவரின் பெயரில் 2 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் வட்டி தற்போதைய விகிதத்தின் படி ரூ.1100 என்ற அளவில் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் இந்த வட்டி மொத்தம் 66 ஆயிரம் ஆக மாறும். அதன்பிறகு முதிர்வு காலத்தில் நீங்கள் இரண்டு லட்சம் ரூபாயை பெறுவீர்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் 1100 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதனை குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணக்கை ஒருவர் அல்லது மூன்று பெரியவர்கள் இணைந்து கூட்டு கணக்கை திறக்கலாம். இந்த கணக்கில் ரூ.3.50 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் நடப்பு விகிதத்தின் படி ரூ.1,925 கிடைக்கும். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு தொகையாக ரூ.4.5 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.2475 பெற முடியும்.

Categories

Tech |