Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.27,353 ஓய்வூதியம் பெற…. ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ ஜாயின் பண்ணுங்க…சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

60 க்கு பிறகு நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் உழைக்கும் பொழுது இருந்தே சிறிய தொகையை சேமித்து வைத்தால் நம்மால் ஓய்வு பெற்ற பிறகு நாம் மகிழ்ச்சியாக மற்றும் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். அதற்கான ஒரு சிறந்த திட்டம் என்பிஎஸ். ஒரு நாளைக்கு 150 என்ற அளவில் நீங்கள் சேமித்து இந்த திட்டத்தில் முதலீடு செய்து வந்தால் ஓய்வு பெறும் போது உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். \

இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பாத்திரங்கள் என்று இரண்டு திட்டங்கள் உள்ளது. கணக்க்கை திறக்கும் போது மட்டுமே எவ்வளவு பணம் ஈக்விட்டியில் செல்லும் என்பதை தீர்மானிக்க முடியும். வழக்கமாக, 75% வரை பணம் ஈக்விட்டிக்கு செல்லலாம். இதன் பொருள் NPS மூலம், நீங்கள் PPF அல்லது EPF ஐ விட சற்றே அதிக வருவாயைப் பெற முடியும்.

தற்போது உங்களுக்கு 25 வயது என்று வைத்துக் கொண்டால் நீங்கள் மாதத்திற்கு 4500 என்ற அளவில், அதாவது ஒரு நாளைக்கு 150 என்ற அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 60 வயதில் ஓய்வு பெறும்பொழுது கோடீஸ்வரராக இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்து வந்தால் 8 சதவீதம் என்ற விகிதத்தில் வருமானம் கிடைக்கும். ஓய்வு பெறும் போது உங்கள் மொத்த ஓய்வூதியம் ஒரு கோடி ரூபாயாக இருக்கும். நீங்கள் பணத்தை ஒரே நேரத்தில் திரும்ப பெற்று விட முடியாது.

இந்தத் திட்டத்திலிருந்து 60 சதவிகிதம் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 40 சதவீதத்தை வருடாந்திர முதலீட்டுத் திட்டத்தில் வைக்கவேண்டும். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும். உங்கள் பணத்தில் 40 சதவீத வருடாந்திர முதலீட்டில் வைக்கிறீர்கள் என்றால், உங்கள் தொகையிலிருந்து நீங்கள் 61.54 லட்சத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மீதமுள்ள தொகைக்கு வட்டி 8% என்று வைத்தால் கூட உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.27,353 ஓய்வூதியம் கிடைக்கும்.

Categories

Tech |