Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.3000 பென்ஷன் கொடுக்கும்…. விவசாயிகளுக்கான அருமையான…. மத்திய அரசின் திட்டம்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.

இதையடுத்து எட்டாவது தவணை செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் மற்றொரு திட்டமான பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்திலும் பென்ஷன் வாங்க முடியும். இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு 60 வயதாகும்போது அவருடைய வங்கிக் கணக்கில் 3000 வந்துசேரும். அதற்கான வயதுவரம்பு 18 முதல் 40 ஆகும்.

60 வயதில் மாதத்துக்கு 55 முதல் 200 பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் சேர நினைப்பவர்கள்  maandhan.in என்ற இணைய முகவரியில் சென்று இணையலாம். இதற்கு ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவை. இதில் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே pm-kisan திட்டத்தில் இணைந்து நிதி உதவி பெறுபவர்கள் இதில் இணைய சுலபமாக இருக்கும். இத்திட்டத்தில் இணைந்து வருடத்திற்கு மொத்தமாக 36 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்.

Categories

Tech |