தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்: கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள 4 கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : 11,100/- முதல் 35,100/- மற்றும் இதர படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், பெரியகுளம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.01.2022