Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாதம் ரூ.3600 செலுத்தினால் போதும்…. ரூ.26 லட்சம் கிடைக்கும்…. குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவும் கன்யதன் திட்டத்தை எல்.ஐ.சி வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தில் மாதம் ரூ.3600 செலுத்தினால் போதும், 25 வருடத்தில் ரூ.26 லட்சம் கிடைக்கும். அதேபோல் பாலிசிதாரர்கள் மூன்று வருடங்களுக்கு பிறகு கடனும் வாங்கிகொள்ளலாம். இந்த தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படாது. இந்த பாலிசியின் முதிர்வு காலம் 13 முதல் 25 வருடங்கள் ஆகும். பாலிசிதாரரான தந்தை இறந்துவிட்டால் பாலிசி தொகை ரத்து செய்யப்பட்டு, மொத்த தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.

Categories

Tech |