Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.5,000 பென்ஷன்…. மத்திய அரசின் அருமையான திட்டம்…. யூஸ் பண்ணிக்கோங்க….!!!!

மத்திய மோடி “அடல் பென்சன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தை தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் தொழிலாளர்கள் பென்சன் பணம் மாதம் 5,000 ரூபாய் வரை வாங்கலாம். அதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு இந்த திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்குகிறது. இந்த அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் நீங்கள் 18 வயதிலேயே இணைந்தால் 60 வயதிற்கு பிறகு உங்களுக்கு ஓய்வு காலத்தில் பென்சன் தொகை மாதம் 5,000 ரூபாய் வரையில் கிடைக்கும்.

நீங்கள் 18 வயதிலேயே இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில் மாதம் 210 ரூபாய் அதிலிருந்து 60 வயது வரையில் டெபாசிட் செய்ய வேண்டும். ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் துவங்க முடியும். இந்த திட்டத்தில் 40 வயது வரையிலான மக்கள் சேரலாம். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 5,000 ரூபாயும், குறைந்தபட்சம் 1,000 ரூபாயும் பென்ஷன் கிடைக்கும். ஒருவேளை பென்ஷன் வாங்கும் நபர் இறந்து விட்டால் அவருடைய மனைவிக்கு (அல்லது) கணவருக்கு பென்ஷன் தொகை கிடைக்கும்.

கணவன், மனைவி இருவருமே இறந்துவிட்டால் அவருடைய நாமினிக்கு பென்ஷன் பணம் போகும். வருமான வரி சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் இந்த திட்டத்திற்கு வரிச்சலுகை கிடைக்கிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் இந்த திட்டத்திற்கு உங்களது வங்கி கணக்கில் உள்ள வங்கியிலேயே பதிவு செய்ய முடியும். வங்கி கிளைகளிலும், ஆன்லைனிலும் இதற்கான படிவங்கள் கிடைக்கின்றன. உங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் எண் இந்த திட்டத்தில் இணைவதற்கு கட்டாயம். இந்த திட்டத்திற்கு நீங்கள் பதிவு செய்யும் வயதை பொறுத்து உங்களுடைய பென்சன் தொகை இருக்கும்.

Categories

Tech |