மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும். நாட்டில் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்திய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதம மந்திரியின் யுவா 2.0 திட்டத்தை அறிமுகம் செய்தது. இது இந்தியா@75 திட்டத்தின் ஒரு புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான முயற்சி. இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அறிவு அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு மொழிகளில் பல்வேறு துறைகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க இந்த திட்டம் உதவுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தேசிய இயக்கம், நாம் பெரிதும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்கள் போன்ற கருப்பொருள்களில் எழுத ஆர்வமுள்ளவர்கள் mygov.in இல் பதிவு செய்ய வேண்டும்.