Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 சேமித்தால் போதும்…. உங்கள் ஓய்வுக்காலத்தில்…. மாதம் ரூ.3000 கிடைக்கும்…!!!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும்.

இவ்வாறு பென்ஷனுக்கான நிறைய திட்டங்கள் இப்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் சேமித்தால் கடைசி காலத்தில் உங்களுக்கு பென்ஷனாக மாதம் 3,000 ரூபாய் கிடைக்கும். 18 முதல் 40 வயதுக்குள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் கணக்கு ஆரம்பிப்பதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.55 முதல் 200 ரூபாய் வரையில் சேமித்தால் 60 வயதைத் தாண்டியவுடன் உங்களுக்கு பென்சன் தொகை கிடைக்கும். மாதத்துக்கு 55 ரூபாய் சேமிப்பதாக இருந்தால் நீங்கள் 42 வருடங்களுக்கு இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும்.

Categories

Tech |