தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டம் 2022-24 (TNCMFP) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TNCMFP பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2022-24 (TNCMFP) பணிக்கு என்று மொத்தமாக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
NCMFP கல்வி தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science பாடப்பிரிவில் Bachelor’s degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Masters degree முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
TNCMFP அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
TNCMFP வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்ச வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இதில் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதும், BC / MBC விண்ணப்பதாரர்களுக்கு 33 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNCMFP ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.65,000/- பெறுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் கூடுதல் தொகையாக மாதம் ரூ.10,000/- பெறுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNCMFP தேர்வு முறை:
Preliminary Assessment (Computer-based Test)
Comprehensive Examination (Written Examination)
Personal Interview
TNCMFP விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 ம் தேதி முதல் 10.06.2022 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
https://g06.tcsion.com//EForms/configuredHtml/32269/77257/registration.html