ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நிறுவனம் தன் பெண் ஊழியர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது. குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரையிலும் ரூபாய் 7000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தன் பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர்த்து பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்து கொள்ளலாம். அதன்பின் 24 வாரங்களுக்கு தாங்கள் விரும்பும் நேரங்களில் பணிபுரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என ஒரு வருடத்திற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று அண்மையில் தந்தையானவர்களும் தன் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் அறிவித்துள்ளது.