Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாதம் “7,000 ரூபாய்” உதவித்தொடையுடன்…. தொழில் பழகுனர் பயிற்சி முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அரசு தொழிற் பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் முன்னணி அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறது. இவர்கள் தகுதி உள்ளவர்களை நேரடியாக தொழில் பழகுனர் பயிற்சிக்காக தேர்ந்தெடுப்பார்கள்.

இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் dgt.gov.in/appmelaapril22 என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். அதன்பிறகு தங்களுடைய அசல் சான்றிதல்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இதில் சேர்பவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 7,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இதில்  தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில்  முன்னுரிமை வழங்கப்படும்.

Categories

Tech |