மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்பொழுது மீண்டும் ரே என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் இந்தியாவின் சொந்த ஏவுகணையை விண்ணில் ஏவும் கனவை கொண்டிருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்த அவரின் வாழ்க்கை மற்றும் விளைவை உணர்வு பூர்வமாக கொடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. குறைந்த செலவில் ராக்கெட் என்ஜினை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரோவிற்கு சென்று பணியாற்ற முடிவு செய்கின்றார். பின் அங்கு சென்று இஞ்சினை தயாரிக்க அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்புகின்றார்.
இதை அடுத்து பல வருடங்களுக்கு பிறகு 60 லட்சம் செலவில் லீகுய்ட் பியூயல் இன்ஜினை கண்டுபிடித்தார். வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்த இன்ஜினை குறைந்த செலவில் கண்டுபிடித்து சாத்தியமாகி சாதனை படைத்திருக்கின்றார். இஸ்ரோவின் இயக்குனராக வேண்டிய நிலையில் திடீரென காவல்துறையால் அவர் கைது செய்யப்படுகின்றார். அதன் பின்பு என்ன நடக்கின்றது என்பதே ராக்கெட்ரி திரைப்படத்தின் கதையாகும். இயக்குனர், நடிகர் என தனது முழு உழைப்பையும் படத்திற்காக கொடுத்திருக்கிறார் மாதவன்.