சென்னையை அடுத்த மாதவரம் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். மேலும் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர தீயினால் சுற்று வட்டார பகுதிகள் கரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது..
அதே சமயம் புகையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கிடங்கில் இருக்கும் பேரல் ஒவ்வொன்றாக வெடித்து சிதறுவதால் தீ வேகமாக பரவியது. இதனால் கூடுதலாக 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.
தற்போது 15 தீயணைப்பு வாகனங்கள், 20மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிடங்கில் மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு படையினர் 4 பகுதிகளில் இருந்தும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Massive fire in a chemical depot at Madhavaram, Chennai.15 fire tenders and 20 metro water tankers are deployed to fight the fire. Firefighters trying to bring the fore under control and trying bro find what kind of chemical substances stored there. pic.twitter.com/HNSKTCRAVk
— Mugilan Chandrakumar (@Mugilan__C) February 29, 2020
@ZeeNews @republic @aajtak @ABPNews @ndtv fire at madhavaram parking pic.twitter.com/oDeerGHM6T
— SIDDHARTH.ATRI 🇮🇳 (@siddharth_atri) February 29, 2020
@news7tamil Chemical godown near Madhavaram bus terminus got fired and burning past 2 hours don't know how many survived police are planning to stop but they're helpless kindly live this pic.twitter.com/wIMhPcYSkM
— கிருஷ்ணா வேலாயுதம் (@Krishnavels) February 29, 2020
Fire accident near @Madhavaram andra bus terminus pic.twitter.com/JwDDirqlne
— navinkumar (@meetnavin) February 29, 2020