திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப் பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 500 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்து பற்றிப் பேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாஜலம், “இந்த விபத்தால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
அபாயகரமான அளவிற்குக் காற்று மாசுபாடு ஏற்படவில்லை. காற்றின் தரம் குறித்து மணலியில் உள்ள ஆய்வு மையம் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 5க்கும் மேற்பட்ட வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்தில் இருக்கின்றனர் என்றும் ரசாயன புகையில் நச்சுத்தன்மை இல்லாததால் மக்கள் அச்சப்பட்ட இல்லை என தெரிவித்துள்ளார்.