Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் கோளாறா? அதிக ரத்த போக்கா? தீர்வு இதோ…!!

அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர் .நமது வழிபாடுகளிலும் அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய் .

இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது.

தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.

தேங்காய் பாலை குடித்தால் நட்டுவக்காளி கடித்த விஷம் இறங்கிவிடும்.

வயிற்றில் அல்லது வாயில் புண் இருந்தால் தேங்காய் பாலில், தேன் கலந்து குடித்தால் ஓரிரு நாளில் குணமாகும்.

தேங்காய் பாலில் மாசிக்காய் சேர்த்து, அரைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

தேங்காய்ப்பால் விட்டு சீரகத்தை அரைத்து பூசிவர வெயில் காலத்தில் ஏற்படும் கட்டி கொப்புளங்கள் வேர்க்கூறு ஆகியவை குணமாகும்.

தென்னம் வேரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

புளிக்காத தென்னங்கள்ளை கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வந்தால் அழகான குழந்தை பிறக்கும்.

Categories

Tech |