மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள். அதற்கு இயற்கை தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் பூப்படைந்த காலத்திற்கு பிறகு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கமான ஒன்று. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். குறைந்தபட்சம் 21 நாட்களிலிருந்து 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உண்டாகக் கூடும். இது போன்று ஒவ்வொரு மாதமும் வந்தால் பிரச்சனை இல்லை.
சிறு வயது பெண்களுக்கு தாமதமாவது பிரச்சனை இல்லை, அதே 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 90 நாட்கள் அல்ல அதற்கும் மேற்பட்ட நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மாதவிடாய் பிரச்சனைக்கு இயற்கை தீர்வு
இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது.
தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.
தேங்காய் பாலை குடித்தால் நட்டுவக்காளி கடித்த விஷம் இறங்கிவிடும்.
வயிற்றில் அல்லது வாயில் புண் இருந்தால் தேங்காய் பாலில், தேன் கலந்து குடித்தால் ஓரிரு நாளில் குணமாகும்.
தேங்காய் பாலில் மாசிக்காய் சேர்த்து, அரைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.
தேங்காய்ப்பால் விட்டு சீரகத்தை அரைத்து பூசிவர வெயில் காலத்தில் ஏற்படும் கட்டி கொப்புளங்கள் வேர்க்கூறு ஆகியவை குணமாகும்.
தென்னம் வேரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
புளிக்காத தென்னங்கள்ளை கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வந்தால் அழகான குழந்தை பிறக்கும்.