ஊராட்சி மன்ற தலைவருக்கு மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகளான குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் அமைத்து பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories