அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் நடத்தும் மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள இருப்பவர்கள், தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கலாம் என்று தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு நிதி ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 80 பேரில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 3 பேர், தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தற்போது இந்த மையத்தில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வில் கலந்தகொளா விரும்புவோர் தங்களது விருப்பத்தை, [email protected] எனும் இ -மெயில் முகவரி, 94442 86657 என்ற வாட்ஸ் ஆப் எண், 044 – 24621909 என்ற தொலைபேசி எண் என்று ஏதேனும் ஒன்றில் தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமை தேர்வுக்கான தேதி தொடர்பான விபரங்கள் www.civilservicecoaching எனும் இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். ஆளுமைக் தேர்வுக்காக படித்து டில்லி செல்ல தேர்வு செய்யப்படுவோருக்கு பயணச் செலவுத் தொகையாக ரூ 2,000 இந்த மையத்தால் வருடந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை கடந்த வருடத்தில் 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்று இறையன்பு தெரிவித்துள்ளார்.